திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
கடந்த 18.11.22-ம்தேதி வயலூர் ரோடு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து ரவுடி ராஜா (எ) கார்த்திக் ராஜா என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் குற்றவாளி ராஜா (எ) கார்த்திக் ராஜா என்பவர் மீது கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 6 வழக்குகளும், இருசக்கர வாகனம் மற்றும் பூட்டிய வீட்டில் திருடியதாக 5 வழக்கும், கொலை முயற்சி மற்றம் அடிதடியில் ஈடுபட்டதாக 2 வழக்குகளும், இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக 2 வழக்குகள் உட்பட மொத்தம் 19 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவருகிறது.
எனவே, ரவுடி ராஜா (எ) கார்த்திக் ராஜா என்பவர் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்பவர் எனவும், கத்தியை காண்பித்து பணத்தை பறித்து செல்பவர் எனவும், பூட்டிய வீட்டில் திருடும் எண்ணம் உடையவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு விபச்சார தடுப்புபிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.