மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி 28.01.2020 அன்று D1- தல்லாகுளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. மலைச்சாமி அவர்கள் பீ.பீ.குளம், மருதுபாண்டியர் நகர் 2வது தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது 1. செல்வம் 43/20, த/பெ.சின்னச்சாமி, முல்லைநகர் நகர், மதுரை, 2. ஸ்ரீதர் 32/20, த/பெ. முத்துராமலிங்கம், தத்தனேரி, மதுரை, 3.சுமதி 35/20, க/பெ.காளிமுத்து, மருதுபாண்டியர் நகர், மதுரை, 4.ஆதீஸ்வரி 32/20, க/பெ.குமார், செல்லூர், மதுரை, 5. ஆதீஸ்வரி 55/19, க/பெ.முருகன், பனங்காடி, மதுரை, 6.சுவேதாபேகம் 40/20, க/பெ.சலீம், பீ.பீ.குளம், மதுரை என தெரிய வந்தது எனவே ஆறு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்