கோவை : கோவை கே கே புதூர் முதல் வீதியை சேர்ந்தவர் ஷாஜகான் வயது 38. பெயிண்டர் . இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அங்குள்ள பொது கழிப்பறைக்கு இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது . போலீசார் ஷாஜகானை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் . போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா குற்றம் சாட்டப்பட்ட ஷாஜஹானுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும், விதித்து நேற்று தீர்ப்பளித்தார் அபராதம் தொகையில் 50 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்