தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பூச்செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் 55, ரேஷன் கடை ஊழியர். கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கணேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலிசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் கணேசன் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25000/- ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.