சென்னை: தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் பெண், W24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்த புகாரில், தான் தத்து எடுத்து வளர்த்து வந்த சிறுமி தன்னிடம் சண்டை போட்டு வீட்டைவிட்டு வெளியே சென்று, பெசன்ட்நகர், திடீர்நகர் சர்ச் பின்புறம் உள்ள பிளாட்பாரத்தில் அழுது கொண்டு இருந்தபோது, அவ்வழியே வந்த ராஜ்மோகன் என்பவர் மேற்படி தன் மகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் தெரிவித்தார்.
W24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி ராஜ்மோகனை பிடித்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர்.
சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ராஜ்மோகன், வ/49, தி.நகர், என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமி தனது வளர்ப்பு தாயுடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால் செனாய் நகரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேற்படி ராஜ்மோகன் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.