சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம்,ஆத்தூர் காவல் நிலைய சரகம் செக்காரமேடு அம்மன் பாளையம் பகுதியை சேர்ந்த மாதேஷ்வரி க/பெ சரவணன் என்பவரின் (14) வயது சிறுமியை செல்லம்பட்டி, செங்களாந்தபுரம், ராசிபுரம், நாமக்கல் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் (35) என்பவர் (10/09/2012), அன்று சிறுமி வீட்டிற்கு அருகே பொது தண்ணீர் தொட்டியில் துணி துவைக்க செல்லும்பொது சிறுமியை கடத்தி சென்று ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஆத்தூர் காவல் நிலையத்தில் சட்டப்படி வழக்குபதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபட்டு விசாரணையில் இருந்தது அரசு வழக்கறிஞர் திருமதி. சுதாஇ அவர்கள் சிறப்பாக வாதாடி சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிருபிக்கப்பட்டு நீதிபதி திருமதி. ஜெயந்தி அவர்களால் ஆயுள் தண்டனையும் ரூ.7000 அபராதமும் தீர்ப்பு வழங்கி குற்றவாளியை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்