சேலம்: மேட்டூர் உட்கோட்டம் கருமலைக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் (17), வயது சிறுமியை தங்கமாபுரி பட்டணம் பகுதி சேர்ந்த பிரகாஷ் (25) என்பவர் கடந்த (17. 1 .2019) ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணியளவில் தங்கமாபுரி பட்டணம் மணமகள் மன்றம் அருகில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்யும் இயன்றவரை தடுக்க வந்த அருகில் இருந்தவர்களை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கருமலை கூடல் காவல் நிலையத்தில் குற்ற எண் 16/2020 u/s 294 (b), 341,324,506 (ii) IPC&7,8 OF Pocso Act – 2012 Act ஆக்டிங் படி அப்போதைய கருமலை கூடல் காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா அவர்களால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை (18. 1. 20)ஆம் தேதி அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற குற்றத்திற்காக சேலம் போக சொன்ன நீதிமன்ற நீதிபதி திருமதி ஜெயந்தி அவர்களால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 1500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தற்போதைய விசாரணை அதிகாரியான திரு. குமரன் காவல் ஆய்வாளர் கருமலைக்கூடல் காவல் நிலையம் அவர்களை, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சிவகுமார் அவர்கள், பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்