தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் உட்கோட்டம் கூக்கடப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (35). என்பவர் (15.03.2019) அன்று அதே பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிசார் மேற்கண்ட ராஜசேகர் (35). என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணையானது தர்மபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விசாரணை அதிகாரிகள் திரு.செல்லப்பாண்டியன் (காவல் துணை கண்காணிப்பாளர்) மற்றும் திரு.கரிகால் பாரிசங்கர் (காவல் துணை கண்காணிப்பாளர்) ஆகிய இருவரும் சாட்சி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு (05.12.2024) குற்றவாளி ராஜசேகர்(35). என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தர்மபுரி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.சிவஞானம் அவர்கள் தீர்ப்பளித்தார்.