சேலம் : சேலம் ஊரக உட்கோட்டம் மல்லூர் காவல் நிலைய எல்லையில் இருக்கும் 14 வயது சிறுமியை கருங்கரடு, கருவேப்பிலங்காடு ஏர்வாடி பகுதியை சேர்ந்த திருமலை (41), என்பவர் சிறுமிக்கு இரண்டு வருடமாக பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக மல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரிவு 396,511,397,506 / IPC r/w 5 (1), 5(n), 5(M) 6 Of Pocso Offence act 2012 படி அப்போதைய மல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அம்சவல்லி அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கடந்த (11/5/2020), அன்று கைது செய்த நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் விரைவாக கொற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வந்த நிலையில் (26/6/2023), ஆம் தேதி சாட்சிகள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி திருமலை என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக சேலம் நீதிமன்ற நீதிபதி திருமதி.ஜெயந்தி அவர்களால் ஆயுள் சிறை தண்டனையும் மற்றும் 15000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி.சுதா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர உதவியதாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரியான திருமதி.உஷாராணி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்