சேலம் : சேலம் ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலைய பகுதி சேர்ந்த சசிகலா என்பவர் டேனிஷ் பேட்டை காடையாம்பட்டி பகுதியில் குடியிருந்த வருவதாகவும் (13/4/2019) ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த அண்ணன் முறையுள்ள சித்தி சரசுவின் மகன் அஜித் (24) என்பவர் சசிகலா வீட்டில் இல்லாத போது சற்று மனநிலை சரியில்லாமல் அரசு உதவி தொகை பெற்று பராமரித்து வரும் சிறுமையை குற்றவாளி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போகோ ஆக்ட் படி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயராணி அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை (14/4/2019) அன்று கைது செய்த நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த விசாரணையில் இருந்து வந்த நிலையில் (26/4/2023) ஆம் தேதி சாட்சிகள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளி அஜித் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி திருமதி.ஜெயந்தி அவர்களால் ஆயுள் தண்டனையும் மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் பிடித்த தீர்ப்பு வழங்கி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி.சுதா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரியான திருமதி.இந்திரா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்