கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் உள்ள மோரன பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி நடைபெற்று வருகிறது. அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கோவிந்தராஜ் (45). S/o முனுசாமி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த இவர் மோரன பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் 8.9.10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணிதம் பாடம் நடத்தி வருகிறார். இவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் தவறான முறையில் ஈடுபட்டு பாலியல் வன்முறைக்கு வற்புறுத்தியாக 6ஆம் வகுப்பு பயிலும் மாணவியின் பின்னால் சென்று கட்டிப்பிடித்து பாலியல் கொடுமை செய்வதாக ஓசூர் AWPS காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இத்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சென்று பள்ளியில் விசாரணை செய்ததில் பாலியல் கொடுமை செய்தது உறுதியானது. இந்த புகாரின் பெயரில் குற்ற எண் – 67/2023 U/s 9 (I)10 of Pocso Act என்ற வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்