சேலம் : சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலைய சரகம் காந்திநகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (40),என்பவர் அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படித்து உடல்நிலை சரியில்லாமல் இருந்த (11) வயது நிறைந்த பெண் குழந்தையை கடந்த (28/5/ 2018) ஆம் தேதி முருகேசன் வீட்டிற்கு பெண் குழந்தை அம்மா சுண்ணாம்பு வாங்கி வரச் சொல்லி அனுப்பிய போது முருகேசன் அம்மா கலியம்மாள் வீட்டில் இல்லை அப்போது ஆசிவாரத்தை கூறி முருகேசன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து சேலம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது அரசு வழக்கறிஞர் திருமதி.சுதா, அவர்கள் சிறப்பாக வாதாடி சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி முருகேசன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறுமையை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக (21/11/2022), -ம் தேதி நீதிபதி திருமதி.ஜெயந்தி அவர்களால் ஏழு ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்