இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் விதமாக காவல்துறையினர் பொதுமக்களிடையே தொடர்ந்து விழப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று (28.02.2022) பரமக்குடி கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விதமாக அவசர உதவி எண்கள் 181 மற்றும் 1098-ன் பயன்பாடுகள் குறித்து, பரமக்குடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.மகாலெட்சுமி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.