தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல்துறையினர் பள்ளிகள், பேருந்து நிலையம், மகளிர் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இலவச உதவி எண் 181 மற்றும் காவலன் செயலி பயன்பாடுகள் குறித்தும்
காவல்துறையினரை எப்படி எளிதில் அணுகுவது என்பதை குறித்தும் பிரச்சினைக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தைரியமாக காவல்துறையினரை அணுக முன்வரவேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் இதற்கென ஒரு காவலரை நியமனம் செய்து நாளொன்றுக்கு ஒரு கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.