திருவாரூர்: (15.03.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர், சொரக்குடி, ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதிக அளவில் புத்தகங்களை வாசித்து ஒழுக்கத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்கள். சைபர் கிரைம் சம்மந்தமான இணையவழி குற்றங்கள் குறித்தும், அடையாளம் தெரியாத நபர்களை சமூக வலைதளங்களில் நண்பர்களாக ஏற்க கூடாது என்றும், கைப்பேசிக்கு வரும் தேவையற்ற இணைப்புகளை தொட வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது Seat Belt அணிந்து செல்ல வேண்டும் என்றும், போதை பொருட்கள் பயன்படுத்த கூடாது என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள். மேலும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். அப்போது, பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்திரி, ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.