பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் இன்று அலுவலகத்தில் இருந்தபோது மனு கொடுப்பதற்கு பார்வையற்ற நபர் ஒருவர் வந்துள்ளதை அறிந்து தனது அறையைவிட்டு வெளியே வந்து மேற்படி நபரை தனது அறைக்கு அழைத்து வந்தும் அவரை நாற்காலியில் அமரச் செய்து, குடிக்க தேநீர் வழங்கினார்.
பின்னர் அவரது குறையை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி நபரிடம் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
இறுதியாக மேற்படி நபருக்கு முககவசம் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள் என அன்புடன் கேட்டுக்கொண்டார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை