சென்னை : விழியிழந்தோர் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்ட காவல் துறை சார்பாக இன்று பார்வையற்றோரின் 120 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
உதவி வழங்கும் நிகழ்வை சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் K.பிரபாகர் அவர்களுடன் இணைந்து நமது நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் லயன் திரு.அசோக் சாபத் அவர்கள் வழங்கினார்கள். இதில் உதவிகள் பெற்றுக்கொண்ட பயனாளர்கள், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சுவையான உணவு வழங்கியதோடு மளிகை பொருட்கள்,அவசர கை செலவுக்கு பணம், சிறுவர்களுக்கு தின்பண்டங்கள், கொரோனா தொற்று வராமல் தடுக்க முக கவசம்,கிருமி நாசினி உள்ளிட்ட உதவிகள் வழங்கிய காவல் துணை ஆணையர் திரு.பிரபாகர் அவர்களுக்கும் , காவல் துறையினருக்கும், திரு.அசோக்குமார் சாபத் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கௌரவத் தலைவர் லயன் திரு.அசோக் சாபத் அவர்கள் கொரானா இரண்டாம் அலையின் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்ட நாளில் இருந்து இன்று வரை, சுமார் 28 நாட்கள் தொடர்ச்சியாக ஆதவற்றோருக்கு ஆதரவாக உதவி கரம் நீட்டி வருகின்றார்.