ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பரளை பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி. இது மனைவி லட்சுமி, 55. பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயராமன் மகன் மருதுபாண்டி, 30. இருவருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2014 ஏப்ரல் 27 அன்று, அந்த பாதை வழியாக மருதுபாண்டி நடந்து சென்றார். இதனால் மருதுபாண்டியை, லட்சுமி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து லட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். லட்சுமியின் கணவர் சங்கிலி புகார்படி பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிந்து மருதுபாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. லட்சுமியை கொலை செய்த மருதுபாண்டிக்கு ஆயுள் தண்டனை, ரூ மூவயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்