கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி கோவைக்கு கொண்டுவந்து கோவை மாநகரின் பல்வேறு கடைகளுக்கு கோவையை சேர்ந்த ஆல்வின் கின்ஸ்டன் (29) மற்றும் விக்னேஷ்(26) ஆகிய விற்பனை செய்து வந்தனர்.
கோவை மாநகரம் மத்திய சரகம் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் அவர்கள் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவரிடமிருந்து சுமார் 500 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 1,65,000/- ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
