கோவை: கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் மூலம் ஏராளமான பார்சல்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று அங்கு வந்த பார்சல்களைபாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பார்சல் மீது அவர்ளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் கை துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சலை தகுந்த பாதுகாப்புடன் பிரித்து பார்த்தனர். அதில் ஒரு கை துப்பாக்கி மற்றும் குண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அந்த கைத்துப்பாக்கியை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்தபார்சலில் அனுப்புனர். டாக்டர் சாமுவேல் டி. ஸ்டீபன்|சேலம் என்ற முகவரி இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது குழந்தைகள் விளையாட கூடிய கைத்துப்பாக்கி என்றும் அது பழுதடைந்ததால் பழுது பார்ப்பதற்காக உத்திரபிரதேசத்துக்கு பார்சலில் அனுப்பி வைத்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அழைத்துள்ளனர்.