வேலூர் : (04.04.2023), தேதி காட்பாடி Railway station bus stand-ல் நடந்து சென்று கொண்டிருந்த நபரின் மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு காரில் குடியாத்த சாலையை நோக்கி தப்பி சென்ற குற்றவாளிகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காட்பாடி காவல் ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன், அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை மடக்கிப்பிடித்தனர். இந்த செயலை பாராட்டி (06.04.2023)-ம் தேதி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர் N. கண்ணன், இ.கா.ப.அவர்கள் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை மடக்கி பிடிக்க உதவியாக இருந்த காட்பாடி தனிப்பிரிவு, cyber cell,PCCRC மற்றும் காட்பாடி காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்