வேலூர்: 29ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறையின் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ்கண்ணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் முழுவதும் 1 A.D.S.P, 1 A.S.P மற்றும் 7 D.S.P-கள் உள்ளடக்கிய சுமார் 700 போலீசார்கள் அதி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் நகர, புறநகர் மற்றும் காட்பாடி பகுதிகளில் அதிக மக்கள் கூடும் இடங்களான புதிய, பழைய பேருந்து நிலையங்கள், காட்பாடி ரயில் நிலையம் மற்றும் வேலூர் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.