சென்னை : காவல் துறைக்கு அடுத்தபடியாக மிகுந்த சவால் நிறைந்த பணி, பாதுகாவலர் பணி. கொலை, கொள்ளை உள்ளிட்டவற்றைப் நடைபெறுவதற்கு முன்னரே தடுத்து நிறுத்துபவர்கள் பாதுகாவலர்கள். காவல்துறையினரை போல் தன் உயிரை பணயம் வைத்து பணியாற்றுபவர்கள் இவர்கள்.
சென்னை மேற்கு மண்டலம் இணை ஆணையாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் தலைமையில், நேற்று, மேற்கு மண்டலம் துணை ஆணையாளர் திரு.சுவாமிநாதன் அவர்கள், அம்பத்தூர் சரக உதவி ஆணையாளர் திரு.கண்ணன் அவர்கள் மற்றும் T1 சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர், T2 காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்கள் சேர்ந்து பாதுகாவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்கள் மற்றும் பாதுகாவலர்கள், காவல் துறையுடன் இணைந்து பணி செய்தல் பற்றியும், அம்பத்தூர் எல்லைக்குட்பட்ட தனியார் திருமண மணடபத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட பாதுகாவலர்களுக்கு, பாதுகாப்பு பணியின்போது எவ்வாறு திறம்பட செயல்படுவது ? சந்தேகப்படும் நபர்களை கண்டவுடன், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பது? உள்ளிட்ட முக்கிய விதிகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பழனி