கடலூர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அரசு விழா பாதுகாப்பு முன்னேற்பாடு கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS, முதலமைச்சரின் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. கோடீஸ்வரன், திரு. நல்லதுரை மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.