விழுப்புரம்: விழுப்புரம்மாவட்டம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு. M.பாண்டியன் இ.கா.ப அவர்கள் தலைமையில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 26.07.20 21 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
இரண்டாம் நிலை காவலர் , சிறை காவலர் (ஆண் & பெண்) மற்றும் தீயணைப்பாளர் ஆகிய துறைகளின் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு, முன்னேற்பாடு மற்றும் நடவடிக்கை குறித்து சிறப்பு ஆலோசனை முன்னோட்டம் நடைபெற்றது.
இதில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்ந்த எழுத்து தேர்வில் தேர்வாகி உடற்தகுதி தேர்வுக்கு ஆண் -2256 & பெண் 700 பேர் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கூட்டத்தில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் , காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்மந்தபட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் உட்பட அமைச்சு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.