கடலூர்: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் சரகம் கோணங்குப்பம் பெரியநாயகி ஆலய தேரோட்டத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பாதுகாப்பு பணியினை மேற்பார்வையிட்டார். பாதுகாப்பு பணியில் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் தலைமையில், 10 காவல் ஆய்வாளர்கள், 26 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.