கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாளை ( திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்பட உள்ளது. இதையொட்டி கோவை மாநகரில் 1000 போலீசாரும், புறநகர் பகுதியில் 1500 போலீசாரும் என கோவை மாவட்டம் முழுவதும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் மட்டும் முறையான அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
தேவையில்லாமல் ரோட்டில் வலம் வரும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மளிகை கடை, இறைச்சி கடை, மருந்து கடை, காய்கறி கடைகளுக்கு உரிய நேரத்தில் மட்டும் சென்று வர அனுமதிக்கப்படும். நேர நடை முறையை மீறினாலும் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றினாலும் தொற்று நோய் பரவல் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும்.. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இதனால் யாரும் சட்டவிதிகளை மீறி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு நாட்களில் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும்’ ஊரடங்கு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.