தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,
திருட்டு சம்பவங்கள், மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும்,
குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை பதாகைகள் அமைத்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு வரும் பொதுமக்கள் ஏதேனும் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்கும் விதத்தில் உதவி எண்களுடன் கூடிய அறிவிப்பு பதாகைகள் அமைத்து துரித மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்செயல் பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீது நன்மதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.