மதுரை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும், திருட்டு சம்பவங்கள், மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் விதத்தில் விளக்குத்தூண் காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை பதாகைகள் அமைத்தும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு வரும் பொதுமக்கள் ஏதேனும் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக மதுரை மாநகர வாட்ஸ்அப் முறையீட்டு எண்ணுக்கு (83000-21100) தகவல் அளிக்கும் விதத்தில் உதவி எண்களுடன் கூடிய அறிவிப்பு பதாகைகள் அமைத்து மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 12.11.2020-ம் தேதி மதுரை மாநகருக்குள் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்கிச் செல்லவரும் பொதுமக்களுக்கு இடையூறுகள் மற்றும் சிரமங்கள் ஏதுமின்றி பொருட்கள் வாங்கிச் செல்வதற்காகவும், வாகன போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினரால் விளக்குத்தூண் சந்திப்பில் இருந்து காபா சந்திப்புவரை தடைய அரண்கள் (Barricade) அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
[embedyt] https://www.youtube.com/watch?v=uN3lbKroBj0[/embedyt]
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.