இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பாெதுக்கூட்டம் மற்றும் கோவில் திருவிழாக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கூட்டநெரிசலை தடுக்கும் விதமாக தடுப்பு வேலிகள், கைகளில் எடுத்துச் செல்லக் கூடிய ஒலிபெருக்கிகள் மற்றும் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஒளிரும் சமிக்ஞை விளக்குகள்,
அறிவிப்பு பலகைகள் போன்ற நவீன உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக்., அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.