தூத்துக்குடி: வருகின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆய்வு.
வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் 20.03.2024 தொடங்கி 27.03.2024 அன்று வரை நடைபெற உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அதன் வளாக பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜசுந்தர், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. புருஷோத்தமன், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன்ராஜ், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.