தூத்துக்குடி : வேங்கடேஷ் பண்ணையாரின் 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (26.09.2022) 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 15 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 56 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி போலீசாரின் பாதுகாப்பு பணிகளை அம்மன்புரம், மூலக்கரை மற்றும் ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன், ஸ்ரீவைகுண்டம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பட்டாணி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.