தூத்துக்குடி : 19வது வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் வரும் 26, ம் தேதி கடைபிடிக்கப்பட இருப்பதை முன்னிட்டு தூத்துக்குடி குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடம் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரையில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் இல்லம் ஆகியவற்றிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் நேரில் சென்று காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல் கட்டுபாட்டு அறை ஆய்வாளர் திரு. ரேனியஸ் ஜேசுபாதம், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில், ஸ்ரீவைகுண்டம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ரகு உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.