திண்டுக்கல்: போலீசார் மட்டும் 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பல தனிமைப்படுத்த பகுதிகளிலும் அவர்கள் காவல் பணியை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் பல போலீசார் நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிலக்கோட்டை உட்கோட்டத்தில் பணிபுரியும் 225 காவலர்களுக்கு நிலக்கோட்டை டி.எஸ்.பி.முருகன் கிருமி நாசினி, முககவசம், கையுறை, கபசுர குடிநீர் ஆகியவை அடங்கிய பைகளை காவலர்களுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
போலீசார் தங்கள் உடல் நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும் .தினமும் யோகா மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை உண்ணவேண்டும். மன உளைச்சல் கொள்ளவேண்டாம். முகக்கவசம் கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும் ,என்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா