இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் ” பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்” (INTERNET SAFE SURFING AWARNESS WEEK ) திமிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோளிங்கர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது…
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் .திரு.சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களின் உத்தரவின்படி , காவல் துறை தலைவர் (வடக்கு மண்டலம்) திரு.கண்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரைப்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.காப அவர்கள் வழிகாட்டுதலின்படி, திரு.P முத்துக் கருப்பன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணைய வழி குற்றப்பிரிவு) அவர்களின் மேற்பார்வையில் திரு.N. கோட்டீஸ்வரன் , DSP, IUCAW அவர்களின் அறிவுரையின் படி காவல் ஆய்வாளர் திரு.ராஜா குமார் IUCAW அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்: 1930 , www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சரியான தொடுதல் (Good Touch) மற்றும் தவறான தொடுதல் (Bad Touch ) பற்றியும் அவ்வாறு நடைப்பெற்றால் யாரை அணுகவேண்டும் என்ற விவரமும் .அதற்காக எந்த எந்த அலுவலகங்கள் மற்றும் குழுக்கள்செயல்படுகின்றன என்ற விவரமும் மற்றும் அந்த சமயத்தில் அணுக வேண்டிய உதவி இலவச உதவி எண் 1098 / 181 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியில் , , உதவி ஆய்வாளர் திரு. தியாகராஜன் CCPS காவல் நிலையம் திருமதி. விஜயலட்சுமி சிறப்பு உதவி ஆய்வாளர் , திருமதி. கிளாரா சிறப்பு உதவி ஆய்வாளர் அரக்கோணம் மகளிர் காவல் நிலையம் , திரு.பார்த்திபன் (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்- சமூக ஒருங்கிணைப்பாளர்) மாணவ மாணவிகள் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்