சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பள்ளத்துாரை சேர்ந்தவர் மாணிக்கம் 27. மனைவி கயல்விழி. வங்கியில் பணி செய்வதாக கூறிய மாணிக்கம், கயல்விழியுடன் சேர்ந்து வசதியான பெண்களிடம் 24 கேரட் தங்க கட்டிகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளார். 30க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.3 கோடி வசூலித்தனர். பணம் இல்லாதவர்களிடம் காரைக்குடி அடகு கடை ஒன்றில் பணியாற்றும் விக்கி என்பவரிடம் நகைகளை அடகு வைக்க கூறியுள்ளார். அடகு வைக்கப்பட்ட 500 பவுன் நகைகளும் திரும்ப கொடுக்கவில்லை. தற்போது தலைமறைவாகி உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை பெற்றுக்கொண்ட காரைக்குடி டி.எஸ்.பி.அருண், உரிய விசராணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை