பாதாமில் நிறைந்துள்ள சத்துக்கள் : இதில் அதிக அளவு ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி-6 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் உண்டு வரும்போது உங்களுக்கு அணைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.
பாதாமின் ஆரோக்கிய நன்மைகள் : அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்தது
பாதாமில் அதிக அளவு ப்ரோடீன் சத்துக்கள் உள்ளது. உடலின் வளர்ச்சி, ஆரோக்கியமான சருமம், முடி, மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு புரத சத்து மிக மிக முக்கியம். வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கை பிடி பாதாமினை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சியானது சீராக இருக்கும்.
வயதாவதை தடுக்கும் : பாதாமில் அதிக அளவு வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடல் விரைவில் வயதாவதை தடுக்க உதவுகின்றது. மேலும் வைட்டமின் இ உங்களுக்கு மின்னும் சருமத்தினை அளிக்கின்றது. உடல் எடையினை குறைக்க உதவும், பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உண்டு வாருங்கள். அப்பொழுது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும்.
இதயத்தை பாதுகாக்கும் : இதய ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் மிக மிக அவசியம். பாதாமில் அதிக அளவில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது.இவை உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்புகள் அனைத்தையும் வெளியேற்றும்.எனவே உங்கள் இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாமினை உட்கொண்டு வாருங்கள் உறவுகளே.
மலச்சிக்கலை போக்கும் : பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பாதாமில் கிட்டத்தட்ட 12 கிராம் அளவுக்கு நார்சத்து உள்ளது. இவை உங்களின் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மலசிக்கல் பிரச்சினையை ,முற்றிலுமாக தடுக்க உதவுகின்றது. எனவே மலச்சிக்கலை போக்க ஒரு கைப்பிடி அளவு பாதம் உட்கொண்டு வாருங்கள்.
சர்க்கரை வியாதி வராமல்தடுக்க : பாதாமில் அதிக அளவு நார்சத்து உள்ளது. இது உங்கள் உடலில் அதிக அளவு சர்க்கரை உறிஞ்சுவதை தடுத்து உங்களுக்கு சர்க்கரை வியாதி வராமல் காக்கும். மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்து வரும்.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் : பாதாமில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். பாதாமில் உள்ள பொட்டாசியம் சத்து உங்களின் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
புற்று நோய் வராமல் தடுக்கும் ; பாதாமில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்களுக்கு புற்று நோய் வராமல் காக்க உதவும். எனவே புற்று நோய் வராமல் காக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாமினை உட்கொண்டு வாருங்கள். மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதம் உண்டு வருபவர்களின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு தினமும் பாதாமினை கொடுத்து வந்தால் அவர்களின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றத்தினை காண முடியும்.