திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் செல்கின்றனர். பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் மற்றும் ஒளிரும் பட்டைகள் வழங்கி விழிப்புணர்வு பதாகைகள் வைத்து பக்தர்களிடம் பாதுகாப்பாக செல்லுங்கள் எனவும், இரவு நேரங்களில் கவனமாக செல்லும்படியும், இரவு 10 மணிக்கு மேல் பாதயாத்திரை செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் ஓய்வு எடுக்கும் படியும், தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் படியும் அறிவுரை கூறி வருகின்றார்கள்.