திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பேரளம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (180 லிட்டர்) கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் கடத்தி வந்த 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
















