திருவாரூர்: பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் பகுதியில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது டாடா ஏசி வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த – மனோகரன் (22). த/பெ. மதியழகன், திருவிளையாடம், மயிலாடுதுறை மாவட்டம் என்பவர் கைது செய்யப்பட்டு, நபர் கடத்தி வந்த 162 லிட்டர் பாண்டி சாராய பாட்டில்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள்.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் எச்சரித்துள்ளார்கள்.