திருவாரூர்: நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சன்னாநால்லூர் ரயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்த – மணிகண்டன் (28). த/பெ. தாமரைசெல்வன், கிழக்கு தெரு, திருமலைராஜன்பட்டிணம், காரைக்கால் என்பவர் கைது செய்யப்பட்டு, நபர் கடத்தி வந்த 18 லிட்டர் பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கடத்தலில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்