ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பேருந்து நிலையத்தில் போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளையின் சார்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. சிவகுமார் IPS அவர்கள் எழுதி பாடகரை கொண்டு பாட வைத்த கொரானா விழிப்புணர்வு பாடலுக்கு நடனம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Dr. R. சிவகுமார் IPS அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் துணை கண்காணிப்பாளர் திரு. மனோகரன், அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு. முரளிதரன் மற்றும் அரக்கோணம் தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு. கோகுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்

திரு.கஜேந்திரன்
இராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் -ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
அரக்கோணம்















