ஈரோடு : பவானி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நேற்று நடத்தினர். சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பவானியில் நேற்று போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த ஊர்வலத்தை ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன். கார்த்திக் குமார் தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பு பவானி புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கி,அந்தியூர் பிரிவு, ஈரோடு சாலை வழியாக சென்ற ஊர்வலமானது பழைய பேருந்து நிலையம் வந்து நிறைவடைந்தது.
இதில் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர்கள் கண்ணன், முருகையா, போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா