கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டையில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் (29/07/2023) அன்று காலை 9.30 மணியளவில் நடந்த கோர வெடி விபத்து தமிழ்நாடே உலுக்கியது. வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் இறந்த நிலையில் 13 பேர் படுகாயம் அடைந்தனர் 6 கடைகள் தரைமட்டமாக பல வாகனங்கள் தீ பற்றி கருகியது. இந்நிலையில் சம்பவ இடத்தில் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சரயு பட்டாசுக்கடை அனுமதியுடன் தான் செயல்பட்டு வந்தது எனவும், விசாரணை முடிவில் தான் சம்பவம் குறித்து தகவல் கிடைக்கும் எனவும் பேட்டியளித்து இருந்தார். இந்நிலையில் பட்டாசு கடைக்கு மட்டுமே அனுமதி வாங்கி பட்டாசு குடோன் செயல்பட்டு வந்ததாகவும் இங்கு பாறைகளை வெடிக்க கூடிய வெடி மருந்துகள், ஜெலட்டின் குச்சிகள் போன்ற 100 கிலோவிர்க்கும் அதிகமான வெடி பொருட்கள் இருந்தாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். சம்பவ நடந்த அன்று முதல் பல்வேறு துறையினர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர் தமிழ்நாட்டின் உளவுத்துறை, தடயவியல் துறை அதிகாரிகள் நேரில் சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.மத்திய அரசின் தடயவியல் நிபுணர்கள் அருகே செயல் பட்டு வந்த கடை உரிமையாளர்கள் அக்கம் பக்கத்தினர் என பல்வேறு தரப்பிடமிருந்தும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு துறையின் வேலூர் மண்டலத்தை சேர்ந்த வெடி பொருள் நிபுணர் கணேஷ் தலைமையிலான இரண்டு அலுவலர்கள் அடங்கிய குழு நேற்று ஆய்வில் ஈடுபட்டிருந்தது வெடிக்காத வெடிகள் விபத்தில் தரைமட்டமான கிடங்கின் மண் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
ஹோட்டலில் இருந்த இரண்டு சிலிண்டருமே வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் ஹோட்டல் நடத்தியவர் எந்த தீக்காயங்களும் இல்லாமல் இருந்திருப்பது சிலிண்டர் வெடிக்க வில்லை என்பதை வலு சேர்க்கும் விதமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி.தம்பிதுரை கிருஷ்ணகிரி பட்டாசு கடை வெடி விபத்து குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சம்பவம் நடந்த இடத்தில் எந்த நிறுவனமும் சிலிண்டர் விநியோகிக்கவில்லை என திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். மேலும் சிலிண்டர் வெடித்ததால் இந்த சம்பவம் ஏற்படவில்லை, என்றும் பட்டாசு கடை தான் விபத்துக்கு காரணம் எனவும் திடுக்கிடும் படி குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி கூறுகையில் பட்டாசு கடைக்கு அருகில் இருந்த உணவகத்தில் கேஸ் சிலிண்டர் கசிந்ததில் தீ பற்றி சிலிண்டர் வெடித்து அருகில் இருந்த பட்டாசு கடை வெடித்ததாக பேட்டி அளித்திருந்தார். இப்படிபட்ட குழப்பமான சூழலில் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு நிர்வாக நீதிபதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சிப்காட் நில எடுப்பு பிரிவுவின் தனி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த பவணந்தி நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கோணங்களில் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது உண்மையான காரணம் குறித்து அறிய கிருஷ்ணகிரி மக்கள் கவலையுடன் சம்பவங்களை தொடர்ந்து உற்று நோக்கி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்