திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. வட மேற்கு மண்டல துணை இயக்குனர் திரு.சத்யநாராயணன் தலைமையில், நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில், புயல் மற்றும் பெரு மழையால் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிய பொது மக்களை மீட்பது குறித்து தீயணைப்பு பணியாளர்கள் ஒத்திகை செய்து காண்பித்தார்கள்.
குறிப்பாக ரப்பர் படகு மூலம் குடியிருப்புகளை தண்ணீர் தண்ணீரில் மூழ்கிய நபர்களை மீட்பது,கயிறுகள், லைப்பாய், லைப் ஜாக்கெட், டைவிங் சூட் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி மனித உயிர்களை காப்பாற்றுவது மற்றும் பொதுமக்களின் இருப்பிடத்தில் உள்ள எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களின் காப்பாற்றுவதற்கு குறித்த பல்வேறு மீட்பு பயிற்சி மற்றும் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் திருவள்ளூர் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், திருவண்ணாமலை மாவட்ட அலுவலர் முரளி,காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர் குமார்,வேலூர் மாவட்ட அலுவலர் லஷ்மி நாராயணன்,பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா,பொன்னேரி தீயணைப்புத் துறை ஆய்வாளர் சம்பத்,பொன்னேரி மீன்வளத் துறை உதவி இயக்குநர் ஞா.அஜய் ஆனந்த்,பழவேற்காடு மீன்வள ஆய்வாளர் உ.உத்தண்டுராமன், பழவேற்காடு மீனவ கூட்டுறவு சங்க தலைவர் நாராயணன், மற்றும் துணைத் தலைவர் கோட்டைக் குப்பம் சந்திரசேகர், மீனவ பிரதிநிதிகள் அரங்கம்குப்பம் குப்பன், வைரவன் குப்பம் ஞானமூர்த்தி மற்றும் 20 கமாண்டோ வீரர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்