திருவள்ளூர் : தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்பிடவும், 7 ம் தேதி முதல் 11ஆம் தேதிக்குள் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் எனவும் அச்சமயம் காற்றின் வேகம் 40 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை வீச கூடும் எனவும் மீனவர்கள் தங்களது படகுவலைகளை பாதுகாப்பாக வைத்திடவும் கடற்காற்று சராசரியாக 80 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வேலன் தெரிவித்துள்ளார். இத்தகவலை அனைத்து மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் பகுதி தலைவர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கிராம முக்கிய நிர்வாகிகள், மீனவர் கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்