மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள நாராயண நகரில் , பழமை வாழ்ந்த ஸ்ரீ மகா கணபதி திருக்கோயிலில் , மகா சம்ப்ரோஷணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது .
முன்னதாக, வேத விற்பனர்கள் யாகசாலையில் மூன்று நாட்கள் பூஜை நடத்திய பின்பு , அங்குள்ள பூஜை செய்யப்பட்ட கலச தீர்த்தத்தில் உள்ள கலசங்களை வேத விற்பன்னர்கள் வேத , மந்திரங்கள் முழங்க மகா கணபதி திருக்கோவிலின் கும்பத்திற்கு சம்ப்ரோஷணம் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து, திருக்கோயிலில் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவ்விழாவில், மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார் . இக்கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து , கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் 2000க்கும் மேற்பட்டோருக்கு திருக்கோயில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி