44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்து “தொல்காப்பியம்” ஆங்கில மொழியாக்கப் புத்தகம் வழங்கி வரவேற்றார்.