திண்டுக்கல்: கேரளா பாலக்காடு பகுதியில் சேர்ந்த பிரபல சாமியார் சுனில்தாஸ் இவர் திண்டுக்கல், பழனியை அடுத்த சத்திரப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் ரூ.60 லட்சம் கடனாக பெற்று அதற்கு ஈடாக நில ஆவணங்களையும், காசோலைகளையும் சுனில்தாஸ் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சுனில்தாஸ் பணத்தை திருப்பி தரவில்லை என்று சீனிவாசன் பழனி நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் சுனில்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்றம் சுனில்தாசுக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதையடுத்து பழனி வந்த சாமியார் சுனில்தாசை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா