திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (31.07.2024) மன்னார்குடி நகர பின்லே மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது, பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்களாகிய நீங்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும், அனைவரும் ஒற்றுமையாக நட்புடன் பழக வேண்டும் என்று கூறினார்கள். சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது Seat Belt அணிந்து செல்ல வேண்டும் என்றும், போதைப்பொருட்கள் பயன்படுத்த கூடாதென்றும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
இளைய சமுதாயத்தினர் (மாணவ, மாணவிகள்) தற்போது அதிக அளவில் கைப்பேசி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, கைப்பேசியை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்கள்.குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போக்சோ குற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.சைபர் கிரைம் சம்மந்தமான இணையவழி குற்றங்கள் குறித்தும், அடையாளம் தெரியாத நபரை சமூக வலைதளங்களில் நண்பர்களாக ஏற்க கூடாது என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு தெரிவித்தார்கள். மாணவ, மாணவிகள் புத்தக வாசிப்பு மற்றும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், புத்தக வாசிப்புகள், விளையாடுவதல் ஏற்படும் நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தும், கற்பனதால் ஏற்படும் சிறப்புகள் குறித்தும், “கல்வியே சிறந்த செல்வம்” என கூறி கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.